Wednesday, August 1, 2007

வளைகுடா நாடுகளில் பணி புரியும் பெண்களுக்கு உதவ புதிய வசதி (தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

வளைகுடா நாடுகளில் பணி புரியும் பெண்களுக்கு உதவ புதிய வசதி (தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

துபாய்: வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவ அந்த பகுதிகளில் உள்ள இந்திய துõதரகங்களில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய போன் வசதியுடன் கூடிய உதவி மையத்தைத் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

வளைகுடா பகுதிகளில் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்கள், அவர்கள் வேலை செய்யும் வீட்டு நபர்களால் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சரகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைச்சகத்தின் செயலாளர் நிர்மல் சிங் தெரிவித்தார். செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த புதிய வசதிக்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து துபாயில் உள்ள இந்திய துõதர் வேணு ரங்கசாமி கூறுகையில், இந்த புதிய வசதி குறித்து இதுவரை இந்திய அரசிடமிருந்து கடிதம் ஏதம் வரவில்லை; ஆனால் நாங்கள் ஏற்கனவே 24 மணி நேரமும் இயங்கும் டெலிபோன் தகவல் மைய வசதியை ஏற்படுத்தியுள்ளோம். 050 9433111 என்ற எண்ணுக்கு எந்த ஒரு இந்தியரும் தொடர்பு கொண்டு உதவி கோரினால் உடனே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர் என்றார்.

02. குரான் விருது விழா (தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

துபாய்: துபாயில் நடைபெற உள்ள துபாய் சர்வதேச புனித குரான் விருது விழாவில் பங்கு பெற 40 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்க முன் வந்துள்ளன. இந்த விருதுக்கான ஏற்பாட்டுக்குழு கூட்டம் அதன் தலைவர் இப்ராகிம் பு மெல்ஹா தலைமையில் அல் தல்வார் மையத்தில் நடைபெற்ற போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.


http://www.dinamalar.com/Ulagatamilargal/2007july24/main.asp

No comments: